• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அயனாவரம் சிறுமி கற்பழிப்பு வழக்கு 16 மீதான குண்டர் சட்டம் ரத்து

January 11, 2019

அயனாவரம் சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் 16 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 12 வயது சிறுமிக்கு 17 பேர்க் கொண்ட கும்பல் போதை ஊசி ஏற்றியும், கத்தியை காட்டி மிரட்டியும் 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.கடந்த ஜூலை மாதம், தந்தை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த வழக்கில் அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிந்த லிப்ட் ஆப்ரேட்டர், காவலாளி உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், சிறையில் உள்ள 16 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்திரவிட்டிருந்தார்.

இதையடுத்து, தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி 16 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி சி.டி.செல்வம் அமர்வு முன்பு
விசாரணைக்கு வந்தது.

அப்போது, 16 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்து நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க