• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இருந்து டெல்லி செல்லும் விமானம் 4 மணி நேரம் தாமதம் – பயணிகள் அவதி

January 11, 2019 தண்டோரா குழு

கோவையிலிருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

120 பயணிகளுடன் கோவையிலிருந்து டெல்லிக்கு நேற்று மாலை 6.30 மணி அளவில் புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் நான்கு மணி நேரத்திற்கு பின் தாமதமாக சென்றது. இதனால் அங்கு இருந்த பயணிகள் மிகவும் கடும் அவதிக்கு உள்ளாவதுடன் டெல்லியிலிருந்து வெளி நாடுகளுக்கு செல்லக்கூடிய 6 பயணிகள் மிகவும் வேதனையடைந்து விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில்,

கோவையில் இருந்து டெல்லி செல்லும் விமானம் நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதற்கான காரணம் டெல்லியிலிருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் மோசமான வானிலை காரணமாக தாமதமாக வந்தது என்றும் , அதன் காரணமாக கோவையில் இருந்து டெல்லி செல்லும் விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க