• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவர் அல்ல -பிரகாஷ் ராஜ்

January 10, 2019

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவர் அல்ல என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் பிரகாஷ் ராஜ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நிர்மலா சீதாராமன் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ்,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவர் அல்ல. இந்திய காங்கிரஸ் கமிட்டியின்முக்கிய பொறுப்பில் ஒரு திருநங்கையை நியமித்த அவரை பெண்களுக்கு எதிரானவர் என்று கூற முடியாது. ராகுல்காந்தியின் அறிக்கையை உற்று நோக்குவது தான் ஒரே வழியா?

ராகுல் கூறிய கருத்தை பெண்களுக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தில் மட்டும் நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்?. பிரதமர் பாராளுமன்றத்துக்கு வரவில்லை, பதிலளிக்கவில்லை என்பது உண்மைதானே. அவர் கூறியதில் நாம் இதையும் இணைத்துப் பார்க்க வேண்டும் மக்களவையில் பிரதமர் பதிலளிக்கவில்லை என்பது தான் உண்மை; அதைத்தான் நாம் கவனிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க