• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வளர்ச்சி என்பதும் அனைத்து தரப்பினருக்குமானதாக இருக்க வேண்டும் – மோடி

January 9, 2019 தண்டோரா குழு

வளர்ச்சி என்பதும் அனைத்து தரப்பினருக்குமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் 10% இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது குறித்து விளக்கமளித்துள்ளார்.

விழாவில் அவர் பேசுகையில்,

வளர்ச்சி என்பது அணைத்து தரப்பினருகுமானதாக இருக்க வேண்டும். அனைவரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே 10% இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. எதிர்க்கட்சிகள் எஸ்.சி. மற்றும் எஸ்.டி.யிலிருந்து சில பகுதிகள் விலக்கப்பட வேண்டும் என்றும் உயர் சாதிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் விரும்புகின்றன. ஆனால் அவற்றிலிருந்து எதுவும் எடுக்கப்படாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன். “ஒதுக்கீடு பில் பற்றி தவறான கருத்துக்கள் பரவி வருகின்றன. நேற்று போல, நாங்கள் ராஜ்யசபாவில் மசோதாவை நிறைவேற்றுவோம் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க