• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுருளும் வகையிலான புதிய தொலைக்காட்சி அறிமுகப்படுத்தி அசத்திய எல்.ஜி நிறுவனம்

January 9, 2019 தண்டோரா குழு

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் பொருள் கண்காட்சியில் சுருளும் வகையிலான புதிய
தொலைக்காட்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 8ம் தேதி முதல் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் பொருள் கண்காட்சி துவங்கியது. இந்த கண்காட்சியில் ஏராளமான புதிய படைப்புகளை பல நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன. கண்காட்சியில் எல்.ஜி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான சுருளும் தொலைக்காட்சி அறிமுகம் படுத்தியுள்ளனர்.
இந்த தொலைக்காட்சி பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 4K Resolution கொண்டது இதில் ஆப்பிள் ஐபாட், ஐபோன் போன்றவற்றில் இருந்து கண்ட்ரோல் செய்யப்படுவது மட்டுமல்லாமல், சிரி போன்றவற்றாலும் கட்டுப்படுத்த முடிகிறது. மேலும் தொலைக்காட்சியை பார்க்காத நேரத்தில், அதை மரப்பெட்டிக்குள் பத்திரமாக சுருட்டி வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் எளிமையாக கையாளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த தொலைக்காட்சி எலக்ட்ரானிக் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

தொலைக்காட்சியை கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான கூகுள் அசிஸ்டென்ஸ் மற்றும் அமேசான் அலெக்ஸா போன்றவற்றையும் பயன்படுத்த முடியும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டபோது பல மக்கள் இதனை பார்த்து வியந்தனர். மேலும், பல்வேறு புதிய வகையிலான ரோபோக்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க