• Download mobile app
23 Dec 2025, TuesdayEdition - 3604
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 700 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கதினர் கைது

January 9, 2019

மத்திய மாநில அரசுகளை கண்டித்து ரயில்நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 700 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கதினரை போலீசார் கைது செய்தனர்.

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை வழங்க வலியுறுத்தியும், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சமாக 18,000 ரூபாய் மாத ஊதியம் வழங்கக்கோரியும், அனைவருக்கு சமூக பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாவதை கண்டித்து மத்திய தொழிற்சங்கள் 48 மணி நேர தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக 25 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், பொதுத்துறை ஊழியர்கள் கோவை ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசு மற்றும் பாரதப்பிரதமர் மோடியை கண்டித்து கோசங்களை எழுப்பினர். ரயில் நிலையத்தின் நுழைவாயில் முன்பு அமர்ந்து இருபது நிமிடங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து முப்பது நிமிடங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 70 பெண்கள் உள்பட 700 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க