• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிராமம் இல்லாவிட்டால் நகரம் இல்லை; மாநகரங்கள் இல்லை – முக.ஸ்டாலின்

January 9, 2019 தண்டோரா குழு

கிராமம் இல்லாவிட்டால் நகரம் இல்லை; மாநகரங்கள் இல்லை திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்” என்ற கொள்கை முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தார். இதையடுத்து இன்று முதல் தொடங்கி வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவாரூர் அருகே புலிவலத்தில் ஊராட்சி சபை கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது பேசிய முக.ஸ்டாலின்,

“நான் ஒரு கோவிலுக்கு வந்ததை போன்று உணர்கிறேன். கிராமம் தான் கோவில். மகாத்மா காந்தி கூட கிராமத்தை தான் கோவில் என்று தான் கூறுவார். அரசியலே இதுபோன்ற கிராமங்களில் தான் உருவாகியுள்ளது. கிராமங்கள் தான் நாட்டின் உயிர்நாடி. கிராமம் இல்லாவிட்டால் நகரம் இல்லை; மாநகரங்கள் இல்லை

மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் லோக்சபா எம்.பிக்கள். எம்.எல்.ஏக்களால் தேர்தெடுக்கப்படுவர்கள் ராஜ்ய சபா எம்.பிக்கள். எம்.பிக்கள் டெல்லியில் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். ஆனால் அனைத்திற்கும் காரணமான எம்.எல்.ஏக்களை தேர்தெடுப்பது நீங்கள் தான். மத்தியில் எம்மாதிரியான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். படித்தவர்கள் அதிகமாக வாக்கு செலுத்த வருவதில்லை. ஆனால் அவர்கள் தான் அதிகளவில் குறைகளை சொல்வார்கள்.

மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. பல்ஸ் பார்ப்பதற்காகவே திட்டமிட்டு திருவாரூருக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாஜக மத்தியில் ஆட்சி வந்ததற்கு பிறகு சோதனைகள் அதிகமாகி விட்டன. பெரிய முதலாளிகளுக்காக பிரதமர் மோடி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க