• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அவசர சட்டத்தை் நிறைவேற்றினால் தான் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடமுடியும் – கே.பாலகிருஷ்ணன்

January 8, 2019 தண்டோரா குழு

அவசர சட்டத்தை் நிறைவேற்றினால் தான் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடமுடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

48 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று இருக்கின்றது. தமிழகத்தில் சிறு குறு தொழில்கள் மூடுவிழாவை நோக்கி சென்று கொண்டு இருக்கும் நிலையில், இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு என்பது ஏமாற்று வேலை. இது தொழில் முனைவோரை ஏமாற்றும் செயல். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் கடலூர் நீதிமன்றம் நேற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அந்த பிரச்சினையில் மார்ச்சிஸ்ட் கட்ட்சி தலையீடு காரணமாக இந்த வழக்கு பதியப்பட்டு நடத்தப்பட்டது. குழந்தைகள் மீது பாலியல் தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கையாக இந்த தீர்ப்பு வந்து இருக்கின்றது. குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவுகளை தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் என தமிழகத்தில் எதுவும் இல்லை. போஸ்கோ சட்டத்தை ஒருங்கிணைத்து நடத்த காவல் துறையில் குழந்தைகள் பாதுகாப்பிற்காக தனி பிரிவு ஏற்படுத்த வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கின்றது. அவசர சட்டத்தை் நிறைவேற்றினால் தான் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடமுடியும். தமிழக அரசு இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்கின்றது. உரிய ஆவணங்களுடன் இந்த வழக்கை அரசு நடத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடரும். உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க கொண்டு வரப்பட்டுள்ள மசோதா , தேர்தல் நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. எந்த வித விவாதம் நடத்தாமல் இந்த இடஒதுக்கீடு கொண்டு வர முயற்சிப்பது சரியானது அல்ல. ஏதாவது சகாசம் செய்து காட்ட பா.ஜ.க கனவு காண்கின்றது. அந்த கனவு பலிக்காது. அதிமுக தேர்தலை சந்திக்க திராணியற்று இருக்கின்றது. , ஊழல்,முறைகேடு என்பதை தவிர வேறு எதுவும் அதிமுகவில் இல்லை.

சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வர் சிறப்பாக செயல்படுகின்றார். மனித உரிமைகளை மதத்தை காட்டி மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவாக எடுக்க வேண்டும்.கொள்கை முடிவெடுத்து அவசர சட்டம் கொண்டு வருவதில் தமிழக அரசுக்கு என்ன சிக்கல். விளைநிலங்களில் மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில் கேபிள்களை புதை வழித்தடமாக கொண்டு செல்ல வேண்டும், புதைவழிதடமாக கொண்டு செல்ல முடியாத இடத்தில் அமைக்கும் மின்கோபுரங்களுக்கு வாடகை கொடுக்க வேண்டும். மரபுகளை பற்றி கவலைப்படாத ஆளுநராக தமிழக ஆளுநர் இருக்கின்றார். சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு இணையாக அதிகாரியை அமரவைத்து இருப்பது முறையான நடவடிக்கையாக இல்லை.

தமிழகத்தில்ஆடு, மடிக்கணினி, சைக்கிள் திட்டங்களும், ஆதரவற்றவர்களுக்கு ஒய்வூதியம போன்ற ஜெயலலிதா கொண்டு வந்த பழைய திட்டங்களே முழுமையாக நடைபெறுவதில்லை. பழைய திட்டங்களையே முழுமையாக கொண்டு செல்ல முடியாத போது பொங்கல் பரிசாக குடும்பத்தினருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் என்பது முறையாக நடைபெறுமா என்பது தெரியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க