• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

January 8, 2019

வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக கோவையில் எல்.ஐ.சி ஊழியர்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக பொதுத்துறை நிறுவனங்கள் இன்று இன்று முதல் 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுத்துறை நிறுவன தொழிற்சங்கங்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றன.

முன்னதாக கோவை திருச்சி சாலையிலுள்ள எல்ஐசி தலைமை அலுவலகம் முன்பாக நூறுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து வங்கிகளும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் பல கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.இதேபோல் கேரளாவில் பொதுத்துறை நிறுவன தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருவதால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதில் கேரள எல்லையோர மாவட்டமான கோவையிலிருந்து கேரளாவில் காண பேருந்துகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளன.

குறிப்பாக கோவை உக்கடம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் நடைமேடை வெறிச்சோடி காணப்படுவதால் கேரளாவிற்கு செல்லும் பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் .கேரளாவில் நடைபெறும் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக சென்ற பயணி ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் பல மணி நேரமாக காத்து கிடக்கிறார்.

மேலும் படிக்க