• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் பதில்

January 8, 2019 தண்டோரா குழு

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேவைப்பட்டால் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் நடந்த மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. பின்னர் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆலையை திறக்கக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதற்கிடையில் ஆலையை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இதையடுத்து,

ஆலை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில் ஆலையை திறக்க கூடாது என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை நிறுத்திவைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஆலையை மூடவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடைவிதிக்கவும் மறுப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் முக. ஸ்டாலின் பேசுகையில்,நேற்று நான் பேசும் போது, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை பற்றி குறிப்பிட்டேன். இன்று ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு மத்திய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதி செல்லும் என்று உச்ச நீதிமன்றம்

தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக அரசு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை அறிய விரும்புகிறேன். என பேசினார்.

பின்னர் ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி,

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேவைப்பட்டால் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க