• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாம்பு தோல் போன்று லெக்கின்ஸ் அணிந்த மனைவியை அடித்து நொறுக்கிய கணவர் !

January 7, 2019 தண்டோரா குழு

பாம்பு போன்று தோற்றமளிக்கக்கூடிய கூடிய லெக்கின்ஸ் மனைவி அணிந்து கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கக் காத்திருந்தார். ஆனால், கணவர் பாம்பு என நினைத்து மனைவியின் காலை அடித்து நொறுக்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்னைச் சேர்ந்த பெண் ஒருவர் பாம்பு தோல் போன்ற தோற்றமளிக்கக்கூடிய கூடிய லெக்கின்ஸ் அணிந்துள்ளார். புதிதாக வாங்கிய அந்த லெக்கின்ஸை கணவரிடம் காட்டி சர்ப்ரைஸாக பயமுறுத்த எண்ணியுள்ளார். ஆனால் அலுவலகம் சென்று வீடு திரும்ப வேண்டிய கணவர் வரத் தாமதமானதால் மனைவி அசதியில் உறங்கிவிட்டிருந்தார்.

இரவு வீட்டுக்கு வந்த கணவர் தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியின் காலுக்குக் கீழ் இரண்டு பாம்புகள் கிடப்பதாக தவறுதலாக எண்ணி மனைவியின் காலை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். அலறி அடித்து எழுந்த மனைவி பாம்பைக் கண்டு பயந்து அலறுவதாக எண்ணி விடாமல் மீண்டும் பலமாக அடித்துள்ளார். அதன் பின்னர் தன் கால் தான் என மனைவி காட்டியவுடன் அதிர்ந்த கணவர் மனைவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். கடுமையாகத் தாக்கப்பட்டு அப்பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில், இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் படிக்க