• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜல்லிக்கட்டுக்கு இழப்பீடு வழங்குவது யார் என்று தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

January 7, 2019 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழப்பு, நிரந்தர ஊனம் ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்குவது யார் என தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மக்களின் பாரம்பரிய விளையட்டு ஜல்லிக்கட்டு என்றும் நாயக்க மன்னர்களின் காலத்தில் உருவானது ஜல்லிக்கட்டு என்றும் கலித்தொகை தவிர வேறெதிலும் ஆதாரம் இல்லை என்றும் மனுதாரர் தெரிவித்திருந்தார். ஜல்லிகட்டு குழுக்களில் அனைத்து சமூக பிரதிநிதிகளையும் இடம்பெறச் செய்ய அரசுக்கு உத்தரவிடவும் கோரப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜல்லிக்கட்டுக் குழுவில் யாரெல்லாம் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும் என்பது அரசின் முடிவு என்றும் அதில் நீதிமன்றம் கருத்து கூற முடியாது என்று தெரிவித்தனர். ஆனால் ஜல்லிக்கட்டு போட்டியின் போது போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உயிரிழந்தாலோ இல்லை நிரந்தம் ஊனம் அடைந்தாலோ அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது யார் என தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க