• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தாலிக்கொடியை கழட்டி எறிந்து பெண்கள் போராட்டம்

January 7, 2019 தண்டோரா குழு

திருப்பூரில் மீண்டும் அமைக்கப்படவுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை கழட்டி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காளிபாளையம் பகுதியில் அரசு மதுபானக்கடை இயங்கி வந்தது. நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை அகற்ற நீதிமன்ற உத்தரவிட்டதையடுத்து இந்த மதுக்கடை அகற்றப்பட்டது. இதையடுத்து அதே பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை மீண்டும் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த டாஸ்மாக் கடையினால் அப்பகுதி மக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகினர். இதையடுத்து, இந்த கடையை அகற்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், மாவட்ட நிர்வாகம் அந்த மதுபானக்கடையை அகற்றியது.

இந்நிலையில் அகற்றப்பட்ட மதுக்கடையை மீண்டும் அதே பகுதியில் பகுதியில் திறக்க டாஸ்மாக் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதனால் மீண்டும் இங்கு மதுக்கடையை திறக்கபட்டால் இப்பகுதி மக்கள் பெரும் இடையூறாக இருக்கும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் தங்கள் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை கழட்டி எறிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் படிக்க