• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் – நடிகர் பிரகாஷ் ராஜ்

January 5, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் தான் போட்டியிடும் தொகுதியை அறிவித்துள்ளார்.

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகராக நடித்து வருபவர் பிரகாஷ் ராஜ். இவரின் சிறுவயது தோழியான கர்நாடகாவின் முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர் கவுரி லங்கேஸ் இந்து அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து அரசியல் கருத்துக்கள் பேச ஆரம்பித்தார். குறிப்பாக அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

இதற்கிடையில், புத்தாண்டு அன்று தனது அரசியல் அறிவிப்பை அறிவிப்பை வெளியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ், புதிய ஒரு தொடக்கம் கூடுதல் பொறுப்பு, உங்கள் அனைவரது ஆதரவோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட உள்ளேன்.எந்த தொகுதி என்பதை விரைவில் அறிவிக்கிறேன். உங்கள் முன்னாள் இருப்பது மக்களாட்சி என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க