• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொழிலதிபர் விஜய் மல்லையா தப்பியோடிய குற்றவாளியாக அறிவிப்பு !

January 5, 2019 தண்டோரா குழு

வங்கி கடன் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா தப்பி ஓடிய குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளில் வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி திருப்பு செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார். இவரை நாடு கடத்த கோரும் மனு லண்டன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் வருமான வரித்துதுறையினர் சார்பில் மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது, தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என்று டெல்லி பொருளாதார சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருளாதார குற்றவாளி என்பதால் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய அவகாசம் ஏதும் அளிக்க முடியாது நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்யவும் முடியும். இன்றைய உத்தரவு வருமான வரித்துறைக்கு பெரும் முன்னேற்றமாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க