• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெய்வமாக இருந்தாலும் ஆக்கிரமிப்பு செய்ய உரிமையில்லை – உயர்நீதிமன்றம்

January 4, 2019 தண்டோரா குழு

தெய்வங்களாக இருந்தாலும் கூட ஆக்கிரமிப்பு செய்ய உரிமை இல்லை என உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார்.

தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் 2005ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் கோவை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் கோவில் அனுமதியின்றி கட்டப்பட்டதாகவும் அதை அகற்ற கோரியும் மற்றும் அரசு நிலங்கள், பொது சாலைகளை ஆக்கிரமித்து வழிபாட்டுத் தலங்களை கட்டக் கூடாது என்ற அரசாணையை பின்பற்ற உத்தரவிடுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த வழக்கை விசாரனைக்கு வந்தது வாழ்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசு புறம்போக்கு நிலங்களை அபகரிக்கும் நோக்குடன் சிலர் கோவில் கட்டுகின்றனர். இதை இந்து சமய அறநிலையத்துறை ஊக்குவிக்கக் கூடாது மீறினால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார். மற்றும் பொதுச் சாலைகளை ஆக்கிரமித்து கோவில்கள் கட்டுவதால் வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார். மேலும், தெய்வங்களாக இருந்தாலும் கூட ஆக்கிரமிப்பு செய்ய உரிமை இல்லை என்றார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்.

இதையடுத்து வருகிற 21ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வழிபாட்டுத் தலங்கள் குறித்த விவரங்களின் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

மேலும் படிக்க