• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கம்யூனிஸ்ட் கட்சி கொடிக்கம்பங்களை வெட்டிச் சாய்த்தவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

January 4, 2019 தண்டோரா குழு

கோவையில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்களை கண்டித்து கம்யூனிஸ்ட்
கட்சிகள் சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது முதல் பற்றி எரிகிறது சபரிமலை விவகாரம். இந்து மத பற்றாளர்கள் இதற்கு எதிராக தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெண்கள் அமைப்புகளும், முற்போக்கு இயக்கங்களும் இந்தத் தீர்ப்பை வரவேற்கின்றனர். இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை கேரள மாநிலத்தில் ஆணாதிக்க சிந்தனைக்கு எதிராக 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற, மகளிர் சுவர் போராட்டம் நடைபெற்றது.

இதற்கிடையில், இரண்டு நாளைக்கு முன்பு இரண்டு பெண்கள் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசித்தனர். இதையடுத்து கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்களை இந்து அமைப்புகள் அடித்து நொறுக்கினார்கள். கேரளம் கலவர பூமியாக மாறியுள்ள சூழலில், கோவையிலும் அப்படியான வன்முறைச் சம்பவங்களுக்கு அடிகோலும் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. சபரிமலையில் பெண்கள் சென்றதுக்கு கோவையிலும் அப்படியான வன்முறைச் சம்பவங்களுக்கு அடிகோலும் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. கோவை வரதராஜபுரம் பகுதியில் நேற்று இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களையும் வெட்டிச் சாய்த்தும் கட்சிக் கொடியையும் சில மர்ம நபர்கள் எரித்துள்ளனர்.

இதையடுத்து, வன்முறையில் ஈடுபட்ட இருவரை துரத்திப் பிடித்த சிங்காநல்லூர் போலீஸிடம் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பாக கோவை வரதராஜபுரம் பகுதியில் இந்துத்துவ அமைப்புகளின் அராஜகத்துக்கு கண்டனம் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.

மேலும் படிக்க