• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளா அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

January 4, 2019 தண்டோரா குழு

முல்லை பெரியாறு அணை விவாகரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக புதிய அணை கட்ட முயற்சிப்பதாக கூறி, கேரள அரசு மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்க அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் முல்லைப் பெரியாற்றின் நம்பகத்தன்மை குறைக்கும் வகையில், அவ்வப்போது ஆதாரம் இல்லாத குற்றசாற்றுக்களை கேரள அரசு கூறிவருகிறது. 2014-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலிமையாக இருப்பதாகவும், அங்கு புதிய அணை கட்டவேண்டிய தேவையே இல்லை என்றும் கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது உள்ளிட்ட முடிவுகளை எடுக்க உச்சநீதிமன்ற ஆணைப்படி வல்லுனர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாற்றின் அணை வலிமையாக இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறிவிட்ட நிலையில் அது வலுவிழந்து விட்டதாக மத்திய அரசிடம் கேரள அரசு கூறியிருப்பதும் உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிரான செயல் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது.

இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.

மேலும் படிக்க