• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 32 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

January 3, 2019 தண்டோரா குழு

சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்கள் மற்றும் அதன் உரிமையாளர்களின் அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பிரபல உணவகங்களுலான சரவண பவன், அஞ்சப்பர் ஆகிய ஓட்டல்களில் வருமான வரி துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோன்று கிராண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனத்திலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் வடபழனி, எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் சுவீட்ஸ் நிறுவன கிளைகள் உள்ளன. இங்கு இன்று காலையிலேயே புகுந்த வருமானவரித்துறையினர் விற்பனை விவரங்களையும், வரவு-செலவு கணக்குகளையும் ஆய்வு செய்தனர்.

இதேபோல் இந்த உணவகங்களுக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள 32 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த 3 நிறுவனங்களும் முறையாக வருமானவரி செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க