• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

January 3, 2019 தண்டோரா குழு

திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி காலியான திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் சனவரி 14 ஆம் தேதி எனவும், திருவாரூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சனவரி 31 ஆம் தேதி நடைபெறும் எனவும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இதற்கிடையில், இந்த தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி

போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதற்கிடையில், கஜா புயலினால், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு நிவாரண பணிகள் நடந்து வருகிறது. புயலின் பாதிப்பில் இருந்து அப்பகுதி இன்னும் முழுமையாக மீளவில்லை என திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் என்.ஜி. ஆர். பிரசாத் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தடையில்லை என்று கூறி, தேர்தல் அறிவிப்பாணைக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.மேலும் திருவாரூர் தேர்தலுக்கு எதிரான மற்றொரு வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு பிப். 7-தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க