• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்களவையில் இருந்து அதிமுக எம்.பி-களை 5 நாட்கள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவு

January 2, 2019 தண்டோரா குழு

தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையில் இருந்து அதிமுக எம்பிக்கள் 5 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து மேகதாது அணைத்திட்டத்திற்கு எதிராக அதிமுக எம்பிக்களும், ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சிறப்பு நிதி தொகுப்பு வழங்க வலியுறுத்தி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதைபோல் காங்கிரஸ் எம்பிக்கள் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது இரு அவைகளிலும் அதிமுக, திமுக உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை முன் வைத்து தொடர்ந்து எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மாநிலங்களவை கூடியதும் அதிமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, பல்வேறு மசோதாக்களும் விவாதங்களும் நிலுவையில் இருப்பதால் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதிமுக உறுப்பினர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். எனினும், அதிமுக எம்பிக்களின் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து முதலில் 15 நிடங்களுக்கும், அதன்பின்னர் மதியம் 12 வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் இதே நிலை நீடித்தது. இதையடுத்து இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் 2 மணிக்கு மாநிலங்களவை கூடியபோது அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததற்காக தம்பிதுரை, வேணுகோபாலை தவிர மற்ற அதிமுக எம்பிக்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர்சுமித்ரா மகாராஜன் உத்திரவிட்டுள்ளார்.

அதைபோல் மாநிலங்களவையிலும், அதிமுக, திமுக எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். இதனால், அவை அடுத்தடுத்து 2 முறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அமளிக்கு பின்னர் மதியம், ராஜ்யசபா கூடிய போது, அவையின் மத்திய பகுதிக்கு வந்து அதிமுக எம்.பி.,க்கள் கோஷம் போட்டனர். இதனைத்தொடர்ந்து, 255வது விதியை பயன்படுத்தி, ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்ட அதிமுக, திமுக எம்.பி.,க்களை அவையில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, அதிமுக, திமுக எம்.பி.,க்கள் ஒருநாளைக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க