• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2018ல் கோவை காவல்துறையின் செயல்பாடுகள் ஒரு பார்வை

January 2, 2019 -ச.ச.சிவசங்கர்

நம் சமூகத்தில் பல மாற்றங்கள், வளர்ச்சிகள், சாதனைகள் என ஒரு கலவையாக தான் நம் பயணம் தொடரும், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வாழ்வில் பல கசப்பான பக்கங்கள் இருக்கும் அது இயல்பு தான். சூழ்நிலையின் காரணமாகவோ அல்லது தனது ஒழுக்கமின்மை காரணமாகவோ ஏற்படும் தவறுகள் சமூகத்தில் குற்றமாக்கப்படுகிறது. அந்த குற்றம் ஒரு தனி மனிதனை மட்டும் சார்ந்ததல்ல விளைவு அதனைச் சார்ந்தவர்களையும் பாதிப்பில் ஆழ்த்துகிறது. எந்தவொரு குற்றத்திற்கும் சட்டம் தான் தீர்வு. பொதுச் சமூகத்திற்கு பாதுகாப்பு சட்டமும், காவல் துறையும் தான், எந்தளவிற்கு கடினமான சட்டங்கள் இருந்தாலும் ஒரு மனிதன் செய்யும் குற்றம் என்பதை காலமும் சூழலும் தான் நிர்ணைக்கும், அந்த சம்பவங்களை அலசி ஆராய்ந்து சட்டத்தின் முன் ஒப்படைப்பது காவல் துறையின் பொறுப்பு. இந்நிலையில் 2018ம் ஆண்டு கோவையில் நிகழ்ந்த குற்றம் மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், சாலை பாதுகாப்பு, சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் அமலாக்கம், தண்டனை பெற்ற வழக்கு விபரங்கள், பெண்கள் பாதுகாப்பு என ஏனைய குற்ற சம்பவங்களின் விவரங்களை காவல் துறையின் சார்பில் வெளியிடபட்டது. அதை பற்றி கீழே காண்போம்,

குற்றத்தடுப்பு நடவடிக்கைகள்:

தமிழநாட்டின் மிக முக்கியமான நகரம் கோயம்புத்தூர், நாள்தோறும் சுற்றுலா பயணிகள், தொழிலதிபர்கள், கல்வி, மருத்துவம் என பல வேலைகளுக்காக வெளியூர் வாசிகள் வந்து போகும் இந்நகரத்தில் குற்றங்கள் நடந்துள்ளது. அப்படியாக 2018ல் சுமார் 35 கொலை வழக்குகள் பதிவு செய்யபட்டு, அதில் 34 வழக்குகள் கண்டுபிடிக்கபட்டுள்ளது. 2017ம் ஆண்டை ஒப்பிடுகையில் கொலை வழக்குகள் 25% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 457 திருட்டு வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது. அவற்றில் 78% வழக்குகள் கண்டுபிடிக்கபட்டும் 75% சொத்துகள் மீட்கபட்டுள்ளன. இந்நிலையில், சுமார் 4,09,68,844 ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் திருட்டு போனதாக தாக்கலான வழக்கில் 3,02,38,675 ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பு:

நாம் அதிவேகமாக ஓடும் யூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் நம் வேலைக்காக சாலையில் கண்மூடித்தனமாக வாகனங்களை ஓட்டுகிறோம். அதற்கேற்ப வாகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் 2018ம் ஆண்டில் 2041 வாகன விபத்து வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளனர். 2017ல் சாலை விபத்தில் உயிரிழந்த வழக்குகள் 736 பதிவு செய்யபட்டுள்ளது. 2018ல் 531 ஆக குறைந்துள்ளது, கடந்த ஆண்டை காட்டிலும் 28% குறைந்துள்ளது.

பிடி ஆணை விபரம்:

2018ம் ஆண்டு 1127 குற்றவாளிகளுக்கு எதிராக பிறப்பிக்கபட்ட பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தண்டனை பெற்ற வழக்கு விபரம்:

2018ம் ஆண்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து 10 கொலை வழக்குகளும் 11 வழிப்பறி வழக்குகளும் 6 கன்னக்களவு வழக்குகளும் 2 இளம் சிறார் பாலியல் வழக்குகளும் தண்டைனயில் முடிவுற்றுள்ளன. தவிர 2862 ஏனைய வழக்குகளும் தண்டனையில் முடிவுற்றுள்ளன.

பெண்கள் பாதுகாப்பு:

சமீப காலமாக நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது, பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியிருந்தன, பெண்களின் பாதுகாப்பை பேணும் வகையில் 2018ம் ஆண்டில் காவலன் எனும் செயலியை அறிமுகபடுத்தினர், இதற்காக சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நிகழ்ந்தது, விளைவாக கோவை மாவட்டத்தில் 9600 நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். 2017ல் 38ஆக பதிவு செய்யபட்ட வழக்குகள் 2018ல் 32ஆக குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சி.சி.டி.வி கேமரா:

சமகாலத்தில் சி.சி.டி.வி கேமரா முக்கிய பங்கு வகித்து வருகிறது. தமிழ்நாட்டில் நடந்த சில கொடூர கொலைகளை சி.சி.டி.வி மூலம் தெரிய வந்துள்ளது யாவரும் அறிந்ததே, இந்நிலையில் கோவை மாவட்டத்தில் முக்கிய இடங்களில் இதுவரை 2246 சி.சி.டி.வி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகளை கண்காணிக்கபட்டு சீரான முறையில் பணிகளை செய்துள்ளனர்.

மேலும், நடப்பு ஆண்டுகளில் காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே விளையாட்டு போட்டிகள் நடத்தி நல்லுறவு மேம்படுத்தவும், சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல் புதிய சவால்களை மேற்கொள்ள காவலர்களை தகுதிப்படுத்தும் வகையில் புத்தாக்க பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினர்.

மேலும் படிக்க