• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு

January 2, 2019 தண்டோரா குழு

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், திமுக வெளிநடப்பு செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த புத்தாண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தி வருகிறார்.

தமிழக சட்டசபை இன்று கூடியது. முதல் நாள் கூட்டமான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். தமிழில் தனது உரையை துவங்கிய ஆளுநர் அனைவருக்கும் வணக்கம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.அத்துடன் எளிமையான வாழ்க்கையை வாழுங்கள், இது ஊழலை அகற்றிவிடும் இதுவே எனது செய்தி என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், ஆளுநர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆளுநர் உரையை புறக்கணித்து ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

தமிழக அரசு செயலிழந்து கிடக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை, கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது.கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை. பெற முடியாத நிலையில் மாநில அரசு உள்ளது.உயர்மின் அழுத்த கோபுரங்கள் தொடர்பாக போராடும் விவசாயிகள் மற்றும் மக்களை அழைத்து பேசமுடியாத அரசு இது உள்ளது. குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். முதலமைச்சராக இருந்தாலும், துணை முதலமைச்சராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகமே குற்றம்சாட்டியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க