• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குஜராத்தில் மாணவர்கள் இனி எஸ் சார் சொல்லமுடியாது; ஜெய் ஹிந்த் தான்!

January 1, 2019 தண்டோரா குழு

குஜராத்தில் பள்ளி மாணவர்கள் இனி வருகை பதிவின் போது எஸ்.சார், எஸ் டீச்சர், என்று கூறுவதற்கு பதிலாக ஜெய் ஹிந்த் என்று கூறுமாறு அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பொதுவாக பள்ளிகளில் ஆசரியர் பெயர்களை வாசிக்கும் பொழுது எஸ்சார், எஸ்டீச்சர், உள்ளேன் ஐயா, பிரசன்ட்சார், பிரசன்ட்டீச்சர் என்று எல்லாம் கூறுவர்கள், இந்த நடைமுறையில் சிறிது மாற்றத்தை கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதில் வருகை பதிவேடு எடுக்கப்படும் போது பெயர் வாசித்ததும் மாணவர்கள் “ஜெய்ஹிந்த்” அல்லது “ஜெய் பாரத்” என்று சொல்ல வேண்டும் என்று குஜராத் மாநில ஆரம்ப பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் குஜராத்தில் அமலுக்கு வந்து உள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.மாணவ – மாணவிகளிடம் நாட்டுபற்றை அதிகரிக்க செய்வதற்காக இந்த திட்டத்தை அமல்படுத்துவதாக குஜராத் மாநில கல்வி மந்திரி பூபேந்திரசிங் தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க