• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரண்டாவது முறையாக சமையல் எரிவாயு விலை குறைப்பு

January 1, 2019 தண்டோரா குழு

சர்வதேச சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு விலைக்கு ஏற்ப மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள், விலை உயர்த்தியும், குறைத்தும் வருகிறது. வீட்டு உபயோகத்துக்கு ஆண்டுக்கு 14.2 கிலோ எடையுள்ள 12 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்த சிலிண்டர்களை சந்தை விலையில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, மானிய தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், வீட்டு உபயோகத்துக்கு மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ சிலிண்டருக்கான விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இன்று 6.52 ரூபாய் குறைத்துள்ளன. இதேபோல் மானியமில்லாத சிலிண்டர் விலை 133 ரூபாய் குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ.500.90க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் இருந்து 6 மாதங்கள் தொடர்ச்சியாக விலை உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்புக்கு முன்னதாக சிலிண்டருக்கு ரூபாய் 14.13 ஆக உயர்ந்து இருந்தது. இப்போதைய விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்த தகவலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வரிகள் மற்றும் போக்குவரத்து செலவை பொறுத்து இந்த விலையில் சிறிது மாற்றம் இருக்கும். இதுபற்றிய அறிவிப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு உள்ளன.

மேலும் படிக்க