2019 நாடாளுமன்ற தேர்தல், மக்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான மோதலாக இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு விரிவான பேட்டி ஒன்றை இன்று வழங்கியுள்ளார்.
அதில், ராமர் கோவில் விவகாரத்தில் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அவசர சட்டம் தற்போது இயற்ற இயலாது. ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் தாமதப்படுத்தியது. சட்ட நடவடிக்கை முடிந்த பிறகு ராமர்கோவில் தொடர்பான அவசர சட்டம் பற்றி பரிசீலனைகப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் சாமானியர் மற்றும் மெகா கூட்டணி இடையே தான் போட்டி. நான் சாமானியரின் பிரதிபலிப்பு தான். ஆர்பிஐ ஆளுநர் பதவியிலிருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இல்லை. அவர் ஆர்.பி.ஐ. ஆளுநராக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். தமது ராஜினாமா குறித்து 6 மாதங்களுக்கு முன்பே உர்ஜித் பட்டேல் தெரிவித்தார். உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படியே முத்தலாக் அவசர சட்டம் இயற்றப்பட்டது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
துல்லிய தாக்குதல் துணிச்சலான நடவடிக்கை, துல்லிய தாக்குதல் நடத்துவதை 2 முறை தள்ளி வைத்து இருந்தோம். ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. துல்லிய தாக்குதலில் எந்த ராணுவ வீரரும் பலியாகக்கூடாது என உறுதியாக இருந்தேன். துல்லிய தாக்குதல் துணிச்சலான நடவடிக்கை துல்லிய தாக்குதல் நடத்திய வீரர்கள் குறித்து கவலை கொண்டிருந்தேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் வில் ஸ்மித்?
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக 31 வது பட்டமளிப்பு விழா – வேந்தர் பால் தினகரன் பட்டங்களை வழங்கினார்
இந்திய சினிமாவில் திறமைமிக்கவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இளம் தலைமுறை திரை பட கலைஞர்களை ஊக்குவிக்க ஸ்கிரீன் அகாடமி துவக்கம்
குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி
கோவையில் நவீன சொகுசு வசதிகளுடன் மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம் !
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்