இன்றைய நவீன இணையதள காலகட்டத்தில் திருமண அழைப்பிதழ்களை வித்தியாசமாக வடிவமைப்பது உலகில் பிரபலமாகிவிட்டது. குறிப்பாக திருமண நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் நடத்துவார்கள். ஆனால் தற்போது திருமண அழைப்பிதழ் கூட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.
லே அவுட் ஆட்டிஸ்டுகளும் தங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வித்தியாசமான அழைப்பிதழ் மாடல்களைக் காண்பிக்கின்றனர். வித்தியாசத்தில் சற்று மாறுபட்டு இதுவரை யாரும் வடிவமைக்கா விதத்தில் வரவேற்பு அட்டை வடிவமைக்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் நீதிமன்ற சம்மன் நோட்டீஸ் வடிவில் ஒரு அழைப்பிதழ் தற்போது அனைவரையும் கவர்ந்து டுவிட்டரில் வைரலாகி வருகிறது. பலவித திருமண அழைப்பிதழ்களை நாம் பார்த்து இருப்போம் ஆனால் இந்த அழைப்பிதழ் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
மாப்பிள்ளை விஷ்ணு மணி மற்றும் மணமகள் அருந்ததி இருவரும் வழக்கறிஞர்களாவர். இவர்களது திருமண அழைப்பிதழ் நீதிமன்ற சம்மன் நோட்டீஸ் போன்று புதுமையாக உள்ளதாக இணையவாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதேபோல் டாக்டர்கள், ரயில்வே பணியாளர்கள், ஆசிரியர்கள், மெகானிக்குகள், ஐடி பணியாளர்கள்,சினிமா துறையில் இருப்பவர்கள் என பல்வேறு துறையினருக்காக பலவிதமான வடிவங்களில் திருமண அழைப்பிதழ்கள் தயார் செய்யப்படுகின்றன. மணமக்கள் தாங்கள் வேலைபார்க்கும் துறை சார்ந்த அழைப்பிதழ்களை அச்சடிக்க விரும்புவதாக திருமண அழைப்பிதழ் வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பெரும்பாலும் விஸ்காம் பயின்ற மாணவர்கள் இந்த லே அவுட் டிசைனில் ஈடுபடுவதால் அவர்களது செயல்பாடு மிகவும் நேர்த்தியாகவும் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வடகோவை சிந்தாமணி சந்திப்பில் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு!
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியில் தமிழ்நாட்டின் அடுத்த மிகப்பெரிய முன்னேற்றத்தை வழிநடத்தும் பிராண்டாக அடிசியா தொடர்ந்து பயணிக்கும் – மணிகண்டன்
கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் அதிநவீன கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தளம் துவக்கம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் இணைந்து எலும்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘ப்ளாசம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினர்
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை