• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட உணவகங்கள் சங்கம் சார்பில் ‘Street Food ‘ உணவு திருவிழா ஜன. 4 ம் தேதி தொடக்கம்

January 1, 2019 தண்டோரா குழு

கோயம்புத்துார் திருவிழா முன்னிட்டு கோவை மாவட்ட உணவகங்கள் சங்கம் சார்பில் steet food உணவு திருவிழா ஜன. 4 ம் தேதி தொடங்கவுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தினர்,

சாம்பார், ரசம், புலிகுழம்பு, சட்னி, மோர் உள்ளிட்ட நீரான பொருட்களுக்கு அரசு மாற்று சொல்லாததால் செய்வதறியாமல் உள்ளோம். குறிப்பாக குவளைக்கு பதிலாக ஸ்டீல் டம்பளர் பயன்படுத்துவதில் உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் பல உள்ளதால் கேட்டரிங்க் தொழிலில் மிகவும் பாதிக்கப்படும். Single use plastic வகைகளுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடை அமலுக்கு வருவதால், இனிமேல் உணவகங்களில் பார்சல் வாங்குபவர்களுக்கு மட்டும் 7 முதல் 10 சதவீதம் விலை உயரவாக இருக்கும். இதுபோன்று பல பொருட்களுக்கு மாற்றுப்பொருட்களை அரசு சொல்லாததாலும், அரசு விதிமுறைக்குட்பட்டு பொருட்கள் தயாரிப்பதில் சிக்கல் உள்ளதால் தொழில் பாதிக்கப்படுவதாகவும், முடிந்தவரை மாற்றுப்பொருட்கள் உள்ளதற்கு பிளாஸ்டிக்கை தவிர்த்து இருந்தாலும், இதுதொடர்பாக அரசிடம் பரிசீலிக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

முன்னதாக, மாவட்ட உணவகங்கள் சங்கம் சார்பில் வருகிற 4,5,6 ஆகிய 3 நாட்கள் street food என்ற பெயரில் உணவு திருவிழா நடைபெறுவதாகவும், அதில் 125 அரங்குகள் அமைக்மப்படுவதாகவும் கூறிய சங்கத்தினர், சிறிய தொழில்முனைவோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கலாம் என்றும், பாரம்பரியம் முதல் அனைத்து வகையான உணவு பொருட்களும் திருவிழாவில் இடம்பெறும் என்றனர்.

மேலும், கோவை கொடிசியா சாலையில் நடைபெறவுள்ள இந்த உணவு திருவிழாவுக்கு பார்க்கிங், கழிவறை, தண்ணீர் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க