• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளேன் – பிரகாஷ் ராஜ் அறிவிப்பு

January 1, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகராக நடித்து வருபவர் பிரகாஷ் ராஜ். இதற்கிடையில், இவரின் சிறுவயது தோழியான கர்நாடகாவின் முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர் கவுரி லங்கேஸ் இந்து அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார்.

அதன் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து அரசியல் கருத்துக்கள் பேச ஆரம்பித்தார். குறிப்பாக அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரகாஷ் ராஜ் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய ஒரு தொடக்கம் கூடுதல் பொறுப்பு, உங்கள் அனைவரது ஆதரவோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட உள்ளேன்.எந்த தொகுதி என்பதை விரைவில் அறிவிக்கிறேன். உங்கள் முன்னாள் இருப்பது மக்களாட்சி என பதிவிட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் இருந்து அவர் போட்டியிடவே அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும் படிக்க