• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் திருடர்களை அரிவாளுடன் விரட்டிய பெண் – தலை தெறிக்க ஓடிய திருடர்கள்

December 31, 2018 தண்டோரா குழு

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஸ்ரீ வாரி கார்டன் பகுதியில் வசிப்பவர் ஸ்ரீனிவாச பிரபு இவரும் இவரது மனைவி கவிதாவும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் தனது சொந்த ஊரான தாராபுரம் தளவாய்பட்டினம் சென்றுள்ளனர். இதையடுத்து வீட்டில் யாரும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட திருடர்கள் இருவர் திங்கள் அதிகாலை 1 மணியளவில் திருட டூவிலரில் வந்துள்ளனர். வீட்டின் முன்பக்கக் கதவின் தாழ்பாளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர்.

இதையடுத்து ஸ்ரீனிவாச பிரபு வீட்டின் அருகில் வசிக்கும் மலர்விழி என்பவர் இரவில் நாய் சத்தம் போடுவதால் யானைகள் ஏதும் வந்திருக்குமோ என்ற பயத்தில் தனது வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமராவைப் பார்த்துள்ளார். அப்போது கேமராவில் பிரபு விட்டின் ஜன்னலில் ஒருவர் செல்வதை பார்த்து சந்தேகம் அடைந்து உடனடியாக பிரபுவின் மனைவி கவிதாவுக்கு செல்போனில் அழைத்துக் கேட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் விட்டில் யாரும் இல்லை என்னவென்று பார்க்க சொன்னதையடுத்து மலர்விழி அவரது கணவர் மற்றும் அருகிலுள்ள ஹரிஸ் என்பவரையும் அழைத்துக்கொண்டு கையில் அரிவாள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு ஸ்ரீனிவாச பிரபு வீட்டுக்குச் சென்றுள்ளனர். பிரபு விட்டின் உள்ளே சத்தம் கேட்கவே இவர்கள் திருடன் திருடன் என்று சத்தம்போட்டுள்ளனர்.

அப்போது விட்டினுள் இருந்த 2 திருடர்களும் வெளியே ஓடிவந்து கம்பவுண்ட் சுவரைத் தாண்டி ஓடியுள்ளனர். இவர்களும் அவர்களைத் துரத்தினர் அதற்குள் சோளக்காடு வழியாகத் திருடர்கள் தப்பித்து விட்டனர்.உடனே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வீட்டில் சோதனை செய்தபோது வீட்டின் பீரோ ஒடைக்கப்பட்டு பீரோவில் இருந்த செயின், மோதிரம், கம்மல், வளையல் உள்ளிட்ட நகைகளை திருடியது தெரியவந்தது. அவை சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் ஆகும். திருடர்கள் தப்பிக்கும் நோக்கத்தில் அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை விட்டு விட்டு ஓடிவிட்டனர் டூவிலரை சோதனை செய்தபோது ஒரு பையில் நகைகள் இருந்துள்ளதாகத் தெரிகிறது. இதை போலீஸார் எடுத்துக்கொண்டு ஸ்ரீனிவாச பிரபு கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலர்விழி கையில் அரிவாளை வைத்து கொண்டு திருடர்களை துரத்தும் காட்சி அங்கு உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவுயாகி உள்ளது. திருடர்களைத் தைரியமாக விரட்டிய மலர்விழிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் படிக்க