• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில் பாக்கெட்டில் வைத்து இருந்த ஆப்பிள் போன் எரிந்ததாக புகார் !

December 31, 2018 தண்டோரா குழு

அமெரிக்காவில் கால் சட்டைப் பையில் வைத்திருந்த போது ஆப்பிள் டென் எஸ் மேக்ஸ் ஐபோன் எரிந்து விட்டதாக ஒஹியோ மாகாணத்தை சேர்ந்த ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கொலம்பஸ் நகரைச் சேர்ந்த ஜோஷ் ஹில்லார்டு (Josh Hillard) என்பவர் மூன்று வாரத்திற்கு முன்னர் ஆப்பிள் டென் எஸ் மேக்ஸ் ஐபோனை வாங்கியுள்ளார். இந்நிலையில் அலுவலகத்தில் இருந்த போது திடீரென அவர் கால் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ஐபோனில் இருந்து தீ வெளிப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

“வாங்கி மூன்று வாரங்களே ஆன ஐ-போன் XS Max என்னுடைய பின் பாக்கெட்டில் வைத்திருந்த போது வெடித்தது. வெடித்ததில் என் பேன்ட் முழுவதும் தீ பரவியது. தீ ஏற்ப்பட்ட போது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கால் சட்டையை அவிழ்த்தபடி ஓடி கழிவறைக்குச் சென்று தீ அணைப்பான் மூலம் அணைத்ததாகவும் கூறியுள்ளார். அலுவலகத்தில் நான் இருந்ததால் எனது அலுவலக நண்பர்கள் என்னைக் காப்பாற்றினர் எனது பின்பக்கம் முழுவதும் காயமடைந்துள்ளது. மிகுந்த எரிச்சல் உள்ளது. நான் ஆப்பிள் நிறுவனத்தில் புகார் அளித்துள்ளேன்.

புகாருக்கு ஆப்பிள் கஸ்டமர் சேவைப் பிரிவில் தகுந்த பதிலும் மரியாதையும் கிடைக்கவில்லை இதனால் அந்த அமெரிக்கர் ஆப்பிள் மீது வழக்குத் தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐ-போன் XS மேக்ஸ் மொபைல் வெடித்ததாக சர்வதேச அளவிலேயே பதிவான முதல் புகாராக இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க