• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புத்தாண்டு பரிசாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் விடுப்பு அளிக்கும் கொல்கத்தா நிறுவனம் !

December 31, 2018 தண்டோரா குழு

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் சம்பளத்துடன் ஒவ்வொரு மாதமும் விடுப்பு அளிக்கப்படும் என கொல்கத்தாவைச் சேர்ந்த மீடியா நிறுவனம் ஒன்று அறிவித்திருக்கிறது.

FlyMyBiz என்னும் டிஜிட்டல் மீடியா நிறுவனம் புத்தாண்டு பரிசாக மாதம் ஒரு நாள் இந்த விடுப்பு பெண் ஊழியர்களுக்கு வழங்கவுள்ளது.

இதுகுறித்து FlyMyBiz நிறுவனர் சாமியோ தத்தா கூறுகையில்,

“எங்களது நிறுவனப் பெண் ஊழியர்களுக்கு இனி ஒவ்வொரு மாதமும் கூடுதலாக ஒரு நாள் விடுப்பு வழங்குகிறோம். ஜனவரி 2019 முதல் இத்திட்டம் அமலில் வரும் அரசு விடுமுறைகள், ஊதியத்துடனான விடுமுறைகள் போக கூடுதலாக ஆண்டுக்குப் 12 நாள்கள் பெண்களுக்குக் கூடுதல் விடுப்பு உள்ளது. இதுபோன்ற சமயங்களில், அவர்கள் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டால் மறுநாள் அவர்கள் தங்களின் வேலையைத் திறம்படச் செய்வார்கள் என்று நினைக்கிறேன் ஊழியர்களின் நலன் எப்போதுமே முக்கியம் அவர்களின் திருப்தி நமக்கு மகிழ்ச்சியைத் தரும்” என்று தெரிவித்தார்.

மேற்கு வங்களாத்தில் இந்த விடுமுறையை அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனம் FlyMyBiz மீடியா நிறுவனம் ஆகும். இத்திட்டத்தை மும்பையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் முன்னதாகவே அமல்படுத்தி உள்ளன. மேலும் நாட்டில் இது மூன்றாவது நிறுவனமாகும். ஏற்கெனவே, இத்தாலி, ஜப்பான், தெற்கு கொரியா ஆகிய நாடுகளில், பெண்கள் மாதவிடாய் காலத்தில் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்ற சட்டம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க