• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

December 31, 2018 தண்டோரா குழு

ஜனவரி 28ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான 2016 சட்டபேரவை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டிட்டு வெற்றிபெற்றார். இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருவாரூர் தொகுதிக்கு ஜன.,28ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஜன.,3ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் ஜன., 10. மனுக்கள் மீதான பரிசீலனை ஜன.,11ம் தேதி துவங்குகிறது. மனுக்களை திருப்பி பெற கடைசி நாள் ஜன., 14. ஓட்டு எண்ணிக்கை ஜன.,31ம் தேதி நடைபெறும். இதனிடையே தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க