• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிளாஸ்டிக் மீதான தடையை 5 ஆண்டுகள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

December 31, 2018 தண்டோரா குழு

ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் உள்ள பிளாஸ்டிக் கடைகள் காலவரையற்று மூடப்படும் என தமிழ்நாடு, பாண்டிச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்துவது திடக்கழிவு மேலாண் மைக்கு பெரும் சவாலாக உள்ளது. மேலும் சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலத்துக்கும் அவை பெரும் கேடு விளைவித்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து முதல்வர் பழனிசாமி கடந்த ஜூன் 5 ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் இந்த தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இதற்கிடையில் சென்னையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து பிளாஸ்டிக் உற்பதியாளர் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் தலைவர் சங்கரன்,

14 பெருட்களுக்கு மட்டும் தடை என்று கூறிவிட்டு தற்போது பிளாஸ்டிக் கடைகளே இருக்கக்கூடாது என்று அரசு கூறிவருகிறது. இதுபிளாஸ்டிக் பொருட்கள் தாயரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடம் தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க