• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குடிபோதையில் லேத் பட்டரை ஊழியர் அடித்து கொலை!

December 28, 2018 தண்டோரா குழு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் குடிபோதையில் லேத் பட்டரை ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒண்டிப்புதூரை அடுத்த காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த அய்யாசாமி என்பவரது மகன் ரத்தினசாமி. பட்டணம் பகுதியிலுள்ள தாட்கோ லேத் ஒர்க்‌ ஷாப்பில் ஊழியராக பணியாற்றும் அவர் அவ்வப்போது நண்பர்களுடன் மது அருந்துவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு அவர் வீட்டிற்கு செல்லாத நிலையில் இன்று காலை ஒண்டிப்புதூர் மேம்பாலத்திற்கு அடியில் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற பீளமேடு காவல்நிலைய ஆய்வாளர் செல்வராஜ் இது தொடர்பாக முதல்கட்ட விசாரணை நடத்தி சிங்காநல்லூர் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார்.

பின்னர் அங்கு வந்த சிங்காநல்லூர் காவல்நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சடலமாக கிடந்த ரத்தினசாமியின் அருகே இரத்தக்கரையுடன் கிடந்த உருட்டு கட்டை ஒன்றை கைப்பற்றியுள்ள போலீசார் குடி போதையில் இருந்த ரத்தினசாமியை போதை ஆசாமிகளால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த ரத்தினசாமியின் உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க