• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எதிர்க்கட்சிகளின் பெரும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றம்

December 27, 2018 தண்டோரா குழு

எதிர்க்கட்சிகளின் பெரும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டது.

முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்-2018 ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின் படி ‘முத்தலாக்’ முறையில் மனைவியை விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்றும், இதன்மூலம் கணவருக்கு 3 வருடங்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு, விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு ஜாமீன் வழங்குவது உள்பட சில திருத்தங்களை செய்தது. எனினும் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்படவில்லை. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் இதற்காக சில திருத்தங்களையும் சேர்த்து ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதும் முத்தலாக் அவசர சட்ட மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார் செய்தார். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கிடையில், இன்று மக்களவை கூடியதும் முத்தலாக் மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. தற்போதைய நிலையில் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் முத்தலாக் மசோதா மீது மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. பின்னர், முத்தலாக் மசோதாவை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு மக்களவையில் நடைபெற்றது. அப்போது,
வாக்கெடுப்பில் பங்கேற்காமல் காங்., அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், சுமார் 5 மணி நேரம் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் எதிர்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிப்பட்டு மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றபட்டது. மக்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவாக 245 பேரும், எதிராக 11 பேரும் வாக்களித்தனர்.
சட்டவிரோதமாக முத்தலாக் சொல்லுபவருக்கு 3 ஆண்டு சிறை விதிக்க சட்டம் வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க