• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் ‘சீனு’ மோகன் மாரடைப்பால் மரணம்!

December 27, 2018 தண்டோரா குழு

நடிகர் ‘சீனு’ மோகன் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 61.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், விக்ரம், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் சீனு மோகன். அவருக்கு வயது 61.’கிரேசி’ மோகனின் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் மோகன்.

1979-ல் கிரேசி கிரியேஷன்ஸ் நாடகக் குழு ஆரம்பித்த நாட்களிலிருந்தே அதில் மோகன் இடம்பெற்றிருந்தார். வருஷம் 16′, ‘அஞ்சலி’, ‘தளபதி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். பின்னர், நாடகங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார்.

சீனு மோகன் கிட்டத்தட்ட 3000-க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி பல குறும்படங்களிலும் மோகன் நடித்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு ‘இறைவி’ படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. அடுத்தடுத்து ‘ஆண்டவன் கட்டளை’, ‘கோலமாவு கோகிலா’ உள்ளிட்ட படங்களிலும் மோகன் நடித்தார். ஏற்கனவே சிறுநீரக பாதிப்புக்குள்ளாகியிருந்த மோகன், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை திடீரென மாரடைப்பின் காரணமாக மோகன் காலமானார்.

இவருடைய மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க