• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக பிறப்பு சான்றிதழ் வழங்க புதிய சேவை

December 26, 2018 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனையிலேயே உடனடியாக பிறப்பு சான்றிதழ் வழங்க பதிவாளர் கொண்ட புதிய சேவையை தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி துவங்கி வைத்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் செயல்படுத்தப்பட உள்ள பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவமனை முதல்வர், துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக பிறப்பு சான்றிதழ் வழங்க பதிவாளர் கொண்ட புதிய சேவை மையத்தை துவங்கி வைத்தார். அதன் பின் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நகர்புற சுகாதாரம் திட்டம் ஜெய்கா திட்டத்தின் கீழ் கோவை அரசு மருத்துவமனையில் அமைய உள்ள உயர் அறுவை சிகிச்சை மையம் தொடர்பாகவும், வாங்கப்பட உபகரணங்கள் தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி,

கோவை அரசு மருத்துவமனையில் தற்போது 38 ஆம்புலென்ஸ் பயன்பாட்டில் உள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதே போல் ஜெய்கா திட்டத்தின் கீழ் கோவை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ள உள்ள கட்டமைப்பு பணிகள் குறித்தும், மாற்றப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கர்பினி பெண் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலென்ஸ் சேவையானது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 104 சேவை மையத்திற்கு தொடர்பு கொள்பவர்கள் விவரம் மற்றும் சேவை பதிவு செய்யப்படுகிறது. அதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 104 தொடர்பான புகார் ஏதும் வரவில்லை.
மேலும் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இரண்டு நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழை பெறும் வகையிலான சேவை துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து செல்வத்ற்குள் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க