• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் : பாதிக்கப்பட்ட பெண், கணவர் போலீஸில் புகார்

December 26, 2018 தண்டோரா குழு

விருதுநகரில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் அவருடைய கணவர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கர்பிணி பெண் ஒருவர் சாத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு ரத்தசோகை இருப்பது தெரியவந்து டாக்டர்கள் அவருக்கு ரத்தம் ஏற்றவேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதையடுத்து, 2 வாரங்களுக்கு முன்பு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது. இதற்கிடையில், அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் அதே தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது. விசாரணையில் கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததே இதற்கு காரணம் என தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் ஹெச்ஐவி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து விருதுநகர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மனோகரன், துணை இயக்குநர் பழனிச்சாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட ரத்த வங்கி பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் இதுவரை 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணும், கணவரும் சாத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கர்ப்பிணி பெண் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலரிடமும் இதுகுறித்து மனு அளித்துள்ளனர்.

மேலும் படிக்க