December 25, 2018
தண்டோரா குழு
இந்தோனேசியாவில் ஆழிப்பேரலையால் சுனாமி தாக்கி உயிரிழந்தவர்களின் என்ணிக்கை 429 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேஷியாவின் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள கிரகதோ எரிமலை வெடித்து சிதறியது. இதனைத் தொடர்ந்து கடலோர பகுதிகளை சுனாமி தாக்கியது.10 அடி உயரத்திற்கும் அதிகமாக சீறி பாய்ந்த அலைகள் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இந்த ஆழிப்பேரலை தெற்கு சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகள் இடையே சுந்த்ரா நீரிணையை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் உயிர் சேதத்தையும் பெரும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றது.
இதையடுத்து, இந்தோனேசியாவில் சுனாமி தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 429 ஆக அதிகரித்துள்ளது. 150 பேர் மாயமாகி உள்ளதாகவும் 16000 பேர் வேறு இடம் மாறியுள்ளதகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.