December 25, 2018
தண்டோரா குழு
கஜா புயலில் பாதிக்கபட்ட மக்கள் புயல் முடிந்தும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இயல்பு வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு கைது சம்பவங்களும் அண்மையில் நடந்துவருகின்றனர். அந்த கைது சம்பவங்களின் உச்சமாக இளைஞர் ஒருவர் விஷம் குடித்த சம்பவம் சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என் சாவுக்கு காரணம் என்று கூறி கஜா புயலில் பாதிக்கப்பட்ட இளைஞர் இனியவன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியின் முன்னாள்தலைவர் (தி.மு.க) ராஜேந்திரனின் மகன், இனியவன். இதழியல்படித்தஇவர், தலைஞாயிறு பகுதியில் மக்கள் பிரச்னைகளுக்கு முன்வந்து செயல்படக் கூடியவர். கஜா புயலால் தலைஞாயிறு பேரழிவை சந்தித்த அந்த இரவில், அந்தந்தப்பகுதி இளைஞர்கள் தான். துடிப்புடன்செயல்பட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்றினார்கள். அதில் இனியவனும் ஒருவர்.
இந்நிலையில், புயல் அடித்து பல நாட்களாகியும் உணவின்றி, நீரின்றி, வசிப்பிடமின்றி மக்கள் பரிதவித்து நின்ற வேளையில், நிவாரணம் வழங்காத தமிழக அ.தி.மு.க. அரசை கண்டித்து பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. அப்படி, தலைஞாயிறு பகுதியிலும் போராட்டம் நடந்தது. அதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றதைப் போலவே இனியவனும் பங்கேற்றார்.
போலீஸ்நடவடிக்கை
அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியனை மக்கள் விரட்டிய பிறகு, நிவாரணம் கேட்டு போராடிய மக்கள் போராட்டங்களில் குதித்தனர். அவர்களை போலீஸார் கைது செய்ததால் மேலும் பரபரப்பு கூடியது. கைதானவர்களை திருச்சி உள்ளிட்ட நெடுந்தொலைவு சிறைகளில் அடைப்பது, என இன்றுவரை போலீஸ் நடவடிக்கைகள் தொடர்கிறது. இதைதொடர்ந்து, நேற்று கூட தலைஞாயிறு அருகே உள்ளலிங்கத்தடி என்ற ஊரில் ஓர் இளைஞரை கைது செய்துள்ளனர்.
இதில் இளைஞர் இனியவனின் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செ ய்துள்ளது. போலீஸ் அவரை தீவிரமாக தேடிவருகிறது. இதனால் அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாகவே சுற்றிவருகிறார்.
பரபரப்பு வீடியோ
நேற்று இரவு 8 மணி அளவில் தனது முகநூல் பக்கத்தில் இனியவன் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதில், கஜாபுயலால் பாதிக்கப்பட்ட தன்னையும், தன் குடும்பத்தையும், தங்களைப் போன்ற பலரையும் இந்த தமிழக அரசும், காவல்துறையும் தீவிரவாதிகளைப் போல தேடிவருவதாகவும், இந்த வேதனை தாங்க முடியாமல் தான் விஷம் குடித்துவிட்டதாகவும் கூறுகிறார்.
நீதிவேண்டும்:
கண்ணீர் மல்கபேசும் அவர், தன்மரணத்தின் மூலமாக , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டும், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோருகிறார். இனியவன் எந்த ஊரில் தலைமறைவாக இருக்கிறார் என்பது தெரியாத நிலையில், மேலும் அவர் குறித்த தற்போதைய உடல்நிலை என்ன என்பதை பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.