• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசியாவின் 2 வது மிகப்பெரிய பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி !

December 25, 2018 தண்டோரா குழு

அசாம் மாநிலத்தில் சுமார் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்கான ஈரடுக்கு பாலத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைத்தார்.

வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல் பிரதேச மாநிலங்கள் வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைத்து போகிபீல் என்ற இடத்தில் 4.94 கிலோ மீட்டர் நீளத்தில் இரண்டடுக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கட்டிமுடிக்க 30 லட்சம் சிமெண்ட் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. போகிபீல் பாலம், மூன்று வழி சாலையாகவும், கீழ் பகுதியில் இரண்டு வழி ரயில் பாதையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்திற்கு 1997-ல் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவால் அடிக்கல் நாட்டப்பட்டது. 2002-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் தொடங்கி வைக்கப்பட்டது. இப்பாலம் பிரம்மபுத்திரா நதியின் மேலே சுமார் 32 கி.மீ செல்கின்றது. பாலத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த டிசம்பர் 3-ம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

16 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.5900 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இப்பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். பரந்துவிரிந்த தேயிலை தோட்டங்களும், அதைச் சார்ந்த தொழிற்சாலைகளும் நிறைந்த இந்தப் பகுதியில் திறக்கப்பட்டுள்ள ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தால், மக்கள் பெரிதும் பயனடைய உள்ளனர். நீண்டகால கோரிக்கையான நாட்டின் இந்த நீண்ட பாலத்தை திறந்துவைத்தது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பின்னர் பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்ற பிரதமர், அருகில் இருந்த மக்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார். பாலத்தில் காரில் சென்றும் பிரதமர் பார்வையிட்டார்.

இப்பாலம் இந்தியாவின் மிக நீளமான ரெயில்வே பாலம் ஆகும். ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலம் ஆகும். இதில், மேலே மூன்று வழிச்சாலையும் கீழே இரண்டு வழி ரெயில் தடமும் அமைக்கப்பட்டுள்ளன.

பாலத்தின் பலன்:

இந்த பாலத்தால் 170 கிமீ சுற்றி செல்ல வேண்டிய தலை தவிர்க்கப்படும் பயண நேரம் 4 மணி நேரம் குறையும்.இந்த பாலத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டவுடன் வட கிழக்கு மாநிலங்களில் போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்க முடியும். வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதாரம் மேம்படும். வடகிழக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு இந்த பாலம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

கேரளாவின் வேம்பநாடு ரெயில்வே மேம்பாலம் இதுவரை ரெயில்வேயின் மிக நீளமான பாலமாக விளங்கியது. இதன் நீளம் 4.62 கிமீ என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க