• Download mobile app
01 Sep 2026, TuesdayEdition - 3856
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

September 15, 2016 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் நாளை வழக்கம்போல் பள்ளி,கல்லூரிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாளை முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுபட்டது. இதற்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படுமா? என மக்கள் குழப்பத்தில் இருந்தனர், இந்நிலையில், தமிழகத்தில் நாளை வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்றும், திட்டமிட்டபடி காலாண்டு தேர்வுகள் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதைபோல், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு காவல்துறையும் அறிவித்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் 1லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.மேலும், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.நாளை நடைபெறும் போராட்டத்திற்கு தனியார் பள்ளிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து பள்ளிக்கு விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க