December 25, 2018
தண்டோரா குழு
கோவையில் உற்சாகத்துடன் கிறுஸ்துவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறுஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.
கிறுஸ்து பிறப்பு தினமான இன்று உலகம் முழுவதும் கிறுஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள தேவாலயங்களில்சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கோவை காட்டூர் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.
வண்ண வண்ண உடைகளில் கிறுஸ்து பிறப்பின் பெருமைகளை சொல்லும் வகையில் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு குழந்தை ஏசுவை தொட்டிலில் கிடத்தும் நிகழ்ச்சி போன்றவற்றை நடைபெற்றது. இதை தொடர்ந்து அங்கு குழுமியிருந்த கிறுஸ்துவர்கள் உலக அமைதி மற்றும் சமாதானம் வேண்டி சிறப்பு ஆராதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து புத்தாடை அணிந்து வந்திருந்த கிறுஸ்துவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு உற்சாகத்துடன் கொண்டாடினர்.