• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில், சங்க துணை தலைவராக நடிகர் பார்த்திபன் தேர்வு

December 24, 2018 தண்டோரா குழு

தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் கவுதம் மேனனுக்கு பதிலாக பார்த்திபன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில் அவசர செயற்குழுகூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சங்க துணைத்தலைவர் கவுதம் மேனனுக்கு பதிலாக பார்த்திபன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால்,

சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி குறைப்பிற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. ஜிஎஸ்டி குறைப்பால் சினிமா டிக்கெட்டிற்கான கட்டணம் குறையும். அடுத்த செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழு தேதி குறித்து முடிவு எடுக்கப்படும். இளையராஜா இசை விழாவிற்கு, முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்படும் என்றார்.

இளையராஜா நிகழ்ச்சி தொடர்பாக முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம்.

மேலும் படிக்க