• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்ப்பு

December 24, 2018 தண்டோரா குழு

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவர் ஓ.ராஜா. இவர் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் தம்பியாவார். இவர், கழகத்தின் கொள்கை-குறிக்கோகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் சார்பில் கடந்த 19ம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தனது செயலுக்கு நேரிலும் கடிதம் மூலமும் வருத்தம் தெரிவித்ததால் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க