• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் பட்டப்பகலில் கிளி ஜோசியர் வெட்டிக்கொலை

December 24, 2018 தண்டோரா குழு

திருப்பூரில் பட்டப்பகலில் கிளி ஜோசியரை மர்ம நபர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் குமரன் ரோடு அருகே உள்ள பின்னி காம்பவுண்ட் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக ரோட்டோரத்தில் கிளி ஜோசியம் பார்த்து வந்தவர் ரமேஷ் என்கிற குமார். இன்று மதியம் ரமேஷ் அங்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு நபர், சரமாறியாக வெட்டினார். இந்த சம்பவத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்வதற்கு சற்று நேரத்திற்கு முன்பு அந்த நபர், துண்டறிக்கை ஒன்றை அங்கிருந்த பொதுமக்களுக்கு விநியோகம் செய்துள்ளார். அதில், ஜோதிடம் பார்க்க வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளதாகவும் குடும்ப வறுமையில் வரும் பெண்களை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தியதாகவும் எழுதப்பட்டிருந்தது. மேலும், இதில் அரசியல்வாதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், இ்ந்த விஷயத்தில் முறையான விசாரணை நடத்தி, ஜோசியருக்கு பின்னால் இருக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிக்கு இவனால் பாதிக்கப்பட்டவன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திருப்பூரில் பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இச்சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க