• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் திடீரென நான்கு மாடி கட்டிடத்தை இடிக்க முயன்ற மாநகராட்சி அதிகாரிகள்

December 24, 2018 தண்டோரா குழு

கோவையில் திடீரென நான்கு மாடி கட்டிடத்தை மாநகராட்சியினர் இடிப்பு பணியில் ஈடுபட்டதால் அந்த கட்டத்தில் உள்ள குடும்பத்தினர் பீதி அடைந்துள்ளனர்.

கோவை மேற்கு சம்பந்தம் சாலையில் சிவசக்தி அபார்ட்மென்ட் என்ற குடியிருப்பில் 16 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். முறையான வாகன நிறுத்திமிடம் இல்லையென்று கூறி கோவை மாநகராட்சி அலுவலர்கள் குடியிருப்பின் தரை தளத்தை இடிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து குடியிருப்பு உரிமையாளர் பழனியம்மாள் கூறுகையில்,

கடந்த 20 வருடங்களாக இந்த குடியிருப்பில் இருந்து வருவதாகவும், கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி வருவதாகவும்,ஆனால் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் மாநகராட்சி ஊழியர்களும்,காவல்துறையினர் உதவியோடு தரைதளத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் இந்தபணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க