• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என நாங்கள் சொல்லவில்லை – குஷ்பூ

December 22, 2018 தண்டோரா குழு

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என நாங்கள் சொல்லவில்லை என காங்கிரஸ் செய்திதொடர்பாளர் குஷ்பூ கூறியுள்ளார்.

கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் இந்திய கலாசார நட்புறவு கழகத்தின் 22வது தேசிய மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பு பேச்சாளரான குஷ்பு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

காந்தி, நேரு, வல்லபாய் படேல் உள்ளிட்ட தலைவர்கள் மதம், இனம் பார்க்காமல் வளர்ச்சியை தந்தனர். அப்போது பள்ளி, கல்லூரிகளில் சாதி, மதம் பார்க்காமல் பழகிய காலம் நன்றாக இருந்தது, ஆனால், இன்று மதத்தின் பேரில் நடக்கும் பிரிவினை மனதிற்கு வேதனை அளிக்கிறது. ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என நாங்கள் சொல்லவில்லை. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவரை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததற்கு நன்றி. தேர்தல் நேரம் வரும் போது யார் பிரதமர் வேட்பாளர் என முடிவு செய்வோம் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க