• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

December 21, 2018 தண்டோரா குழு

கோவை உணவு பாதுகாப்பு துறை சார்பில் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் உள்ள இந்திய வர்த்தக சபையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவையில் உள்ள தொழில்துறையை சேர்ந்தவர்கள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொழில் நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அதற்கு மாற்று பொருட்கள் பயன்படுத்துவதும் குறித்தும் இந்த கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக பிளாஸ்டிக் தடை குறித்து உள்ள அச்சமும், சந்தேகங்கள் தொடர்பாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். குறிப்பாக அனைத்து தொழில் நிறுவனங்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, மாற்று பொருட்களை உடனடியாக பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உள்ள பொருட்களுக்கு வரி விதிக்க கூடாது எனவும், இதற்காக தண்டனை சட்டத்தை உடனடியாகா அமல்படுத்தாமல் சிறிது காலம் அவகாசம் அளித்து, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தொழில் துறையினர் இந்த கூட்டத்தில் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க